தேசிய விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட தரம்வீர், கிரேஸ் எக்கா ஆகியோருக்கு ஆக்கி இந்தியா வாழ்த்து

தரம்வீர் சிங், தீப் கிரேஸ் எக்கா ஆகியோருக்கு ஆக்கி இந்தியா வாழ்த்து தெரிவித்துள்ளது.;

Update:2022-11-16 22:34 IST

Image Courtesy: AFP 

புதுடெல்லி,

விளையாட்டு துறையில் சாதனைபடைக்கும் வீரர்களுக்கு ஆண்டுதோறும் விருது வழங்கி மத்திய அரசு கவுரவித்து வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டுக்கான விருது பெறுவோரின் பட்டியலை இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகம் சமீபத்தில் வெளியிட்டது.

அதன்படி இந்திய பெண்கள் ஆக்கி வீராங்கனை தீப் கிரேஸ் எக்கா-வுக்கு அர்ஜுனா விருது வழங்கப்படுகிறது. அதே போல் இந்தியாவின் முன்னாள் ஆக்கி வீரர் தரம்வீர் சிங்-க்கு வாழ்நாள் சாதனைக்கான தயான் சந்த் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தேசிய விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முன்னாள் இந்திய வீரர் தரம்வீர் சிங் மற்றும் தீப் கிரேஸ் எக்கா ஆகியோருக்கு ஆக்கி இந்தியா அமைப்பு வாழ்த்து தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக ஆக்கி இந்தியா தலைவர் திலீப் டிர்கி கூறுகையில், "நமது தலைசிறந்த இரண்டு ஆக்கி வீரர்கள் தேசிய விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது ஆக்கி இந்தியாவுக்கு பெருமையான தருணம். வாழ்நாள் சாதனையாளருக்கான தயான் சந்த் விருது பெறவுள்ள தரம்வீர் சிங் மற்றும் அர்ஜுனா விருதை வென்ற தீப் கிரேஸ் எக்காவுக்கு எனது வாழ்த்துக்கள்.

சர்வதேச அரங்கில் இந்திய ஆக்கியின் செயல்திறனுக்கு இரு வீரர்களும் மகத்தான பங்களிப்பை வழங்கியுள்ளனர், அவர்கள் மேலும் வெற்றியடையவும், அவர்களின் எதிர்கால முயற்சிகளுக்கு சிறந்ததாகவும் இருக்க விரும்புகிறேன்" என தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்