இந்திய அணிக்கு எதிரான ஆக்கி தொடர்: ஆஸ்திரேலியா அணி அறிவிப்பு
ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்திற்கான 23 பேர் கொண்ட இந்திய ஆண்கள் ஆக்கி அணியை, ஆக்கி இந்தியா கடந்த வாரம் அறிவித்து இருந்தது.;
,கான்பெரா,
இந்திய ஆண்கள் ஆக்கி அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இந்த தொடரின் முதல் போட்டி நவம்பர் 26ஆம் தேதி அடிலெய்டில் தொடங்குகிறது. ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்திற்கான 23 பேர் கொண்ட இந்திய ஆண்கள் ஆக்கி அணியை, ஆக்கி இந்தியா கடந்த வாரம் அறிவித்து இருந்தது.
இந்த நிலையில் இந்த தொடருக்கான ஆஸ்திரேலியா அணி நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது. 23 பேர் கொண்ட இந்த அணியை இணை கேப்டன்களான அரன் சலேவ்ஸ்கி மற்றும் எடி ஓகென்டன் ஆகியோர் வழிநடத்துவார்கள என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த வருடம் ஜனவரி மாதம் இந்தியாவில் தொடங்கவுள்ள 2023 ஆம் ஆண்டுக்கான எப்ஐஎச் ஆக்கி ஆடவர் உலகக் கோப்பைக்கு தயாராகும் விதமாக இரண்டு அணிகளும் இந்த தொடரில் பங்கேற்கின்றன.
ஆஸ்திரேலிய அணி:
ஜேக்கப் ஆண்டர்சன், டேனியல் பீல், ஜோஷ் பெல்ட்ஸ், ஆண்ட்ரூ சார்ட்டர், ஜேம்ஸ் காலின்ஸ், டாம் கிரேக், மேத்யூ டாசன், ஜோஹன் டர்ஸ்ட், நாதன் எஃப்ராம்ஸ், பிளேக் கவர்ஸ், ஜேக் ஹார்வி, ஜெர்மி ஹேவர்ட், டிம் ஹோவர்ட், டிலான் மார்ட்டின், எடி ஓகென்டன், ஃபிளின் ஓகில்வி, பென் ரென்னி, லாச்லன் ஷார்ப், ஜாக் வெல்ச், ஜேக் விட்டன், டாம் விக்ஹாம், வில்லொட், அரன் சலேவ்ஸ்கி