யூரோ சாம்பியனாக விரும்பினேன் ஆனால்... - எம்பாப்பே

ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் அரையிறுதியில் பிரான்சை வீழ்த்தி ஸ்பெயின் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

Update: 2024-07-10 06:12 GMT

Image Courtesy: AFP 

முனிச்,

17வது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் (யூரோ) தொடர் ஜெர்மனியில் நடைபெற்று வருகிறது. இறுதி கட்டத்தை எட்டியுள்ள இத்தொடரில் நேற்று இரவு நடந்த அரையிறுதியில் முன்னாள் சாம்பியன்களான ஸ்பெயின் - பிரான்ஸ் மோதின.

ஆட்டம் தொடங்கிய 8வது நிமிடத்திலேயே பிரான்சின் ரன்டல் முனெய் கோல் அடித்து அசத்தினார். இதையடுத்து, ஆட்டத்தின் 21வது நிமிடத்தில் ஸ்பெயின் வீரர் யமல் மற்றும் 25வது நிமிடத்தில் டனியும் அடுத்தடுத்து கோல் அடித்தனர். இதனால், ஆட்டத்தின் முதல் பாதியில் ஸ்பெயின் 2-1 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.

இதையடுத்து, ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் பிரான்ஸ் வீரர்கள் கோல் அடிக்க முயற்சித்தனர். ஆனால், அந்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைந்தன. இதையடுத்து, ஆட்டத்தின் இறுதியில் 2-1 என்ற கோல் கணக்கில் பிரான்சை வீழ்த்தி ஸ்பெயின் வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் தொடரில் பிரான்சை வீழ்த்தி ஸ்பெயின் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. இந்நிலையில் இந்த ஆட்டத்தில் தோல்வி அடைந்த பின் பிரான்ஸ் கேப்டன் எம்பாப்பே அளித்த பேட்டியில் கூறியதாவது,

ஐரோப்பிய சாம்பியனாக (யூரோ) வேண்டும் என்ற குறிக்கோளுடன் இருந்தேன். ஆனால் நான் நன்றாக விளையாடவில்லை. யூரோவில் என்னுடைய செயல்பாடுகள் தோற்றுவிட்டன. இது ஏமாற்றமளிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்