யுஎஸ் ஓபன் கோப்பை கால்பந்து : மெஸ்சி தலைமையிலான இன்டர் மியாமி இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்
அரையிறுதி போட்டியில் இன்டர் மியாமி மற்றும் சின்சினாட்டி அணிகள் மோதின.;
ஓஹியோ,
யுஎஸ் ஓபன் கோப்பை கால்பந்து தொடர் அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் இன்று நடைபெற்ற அரையிறுதி போட்டியில் கால்பந்து உலகின் சிறந்த வீரர் மெஸ்சி தலைமையிலான இன்டர் மியாமி மற்றும் சின்சினாட்டி அணிகள் மோதின.
இந்த போட்டியில் இரு அணிகளும் சிறப்பாக ஆடி கோல் அடித்தது. இதனால் இறுதியில் இரு அணிகளும் 3-3 என சமநிலையில் இருந்தது.போட்டி டிரா ஆனதால் வெற்றியாளரை தீர்மானிக்க பெனால்டிஷூட் அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது.
இதில் இன்டர் மியாமி அணி 5-4 என்ற கணக்கில் சின்சினாட்டி அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.யுஎஸ் ஓபன் கோப்பை இறுதிப்போட்டி செப்டம்பர் 27 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் இன்டர் மியாமி -ஹூஸ்டன் டைனமோ அணிகள் மோதுகின்றன.