சவுதி லீக் கால்பந்து : ரொனால்டோ புதிய சாதனை
ரொனால்டோ கிளப் போட்டிகளில் சவுதிஅரேபியாவில் உள்ள அல்-நாசர் அணிக்காக விளையாடி வருகிறார்.
ரியாத்,
கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ கிளப் போட்டிகளில் சவுதிஅரேபியாவில் உள்ள அல்-நாசர் அணிக்காக விளையாடி வருகிறார். அல்-நாசர் அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் நேற்று அல்-இத்திஹாட் அணியை எதிர்கொண்டது. இதில் அல்-நாஸர் அணி 4-2 என அல்-இத்திஹாட் அணியை வீழ்த்தியது.
இந்த போட்டியில் 39 வயதான கிறிஸ்டியானோ ரொனால்டோ 2 கோல்கள் அடித்தார். இதன்மூலம் சவுதி புரோ லீக் கால்பந்தில் ஒரு சீசனில் அதிக கோல்கள் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.இதற்கு முன்னதாக அப்டெர்ரஜாக் ஹம்தல்லா 2019-ல் 34 கோல்கள் அடித்ததுதான் சாதனையாக இருந்தது. அதை தற்போது கிறிஸ்டியானோ ரொனால்டோ முறியடித்துள்ளார்.