லீக்ஸ் கோப்பை கால்பந்து: மெஸ்சி தலைமையிலான இன்டர் மியாமி அணி சாம்பியன்
இறுதிப்போட்டியில் இன்டர் மியாமி - நஷ்வில்லே அணிகள் மோதின.
நஷ்வில்லே ,
கிளப் அணிகளுக்கான லீக்ஸ் கோப்பை கால்பந்து போட்டி தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வந்தது . இதில் அமெரிக்காவின் இன்டர் மியாமி அணிக்காக கால்பந்து உலகின் சிறந்த வீரர் மெஸ்சி விளையாடி வருகிறார்.இந்த தொடரின் இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. இறுதிப்போட்டியில் இன்டர் மியாமி - நஷ்வில்லே அணிகள் மோதின.
இந்த ஆட்டத்தில் இன்டர் மியாமி தொடக்கம் முதல் ஆதிக்கம் செலுத்தியது, ஆட்டத்தின் 23வது நிமிடத்தில் அந்த அணியின் மெஸ்சி அசத்தல் கோல் அடித்தார். இதனால் இன்டர் மியாமி 1-0 என முன்னிலை பெற்றது.
இதனை தொடர்ந்து நடைபெற்ற 2வது பாதி ஆட்டத்தில் 57வது நிமிடத்தில் நஷ்வில்லே அணியின் பிக்கால்ட் கோல் அடித்தார். இதனால் 1-1 என சமநிலை ஆனது.
தொடர்ந்து இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை .இதனால் ஆட்ட நேர முடிவில் 1-1 என சமநிலையில் இருந்தது. வெற்றியாளரை நிர்ணயிக்க பெனால்டி ஷூட் அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது.
பெனால்டி ஷூட் அவுட் முறையில் 10 - 9 என்ற கணக்கில் இன்டெர் மியாமி அணி வெற்றி பெற்றது. இதனால் இன்டர் மியாமி சாம்பியன் பட்டம் வென்றது.