ஐ.எஸ்.எல் கால்பந்து: ஜாம்ஷெட்பூர் அணியை வீழ்த்தியது ஈஸ்ட் பெங்கால்

இன்று நடைபெற்ற போட்டியில் ஜாம்ஷெட்பூர்-ஈஸ்ட் பெங்கால் அணிகள் மோதின.;

Update:2022-11-27 22:08 IST

image courtesy: Indian Super League twitter

ஜாம்ஷெட்பூர்,

11 அணிகள் இடையிலான 9-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி கொச்சி, பெங்களூரு, சென்னை உள்பட பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் உள்ளூர், வெளியூர் அடிப்படையில் 2 முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 6 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறும்.

இந்த நிலையில் இந்த தொடரில் ஜாம்ஷெட்பூரில் இன்று நடைபெற்ற போட்டியில் ஜாம்ஷெட்பூர்-ஈஸ்ட் பெங்கால் அணிகள் மோதின. இந்த போட்டியில் ஈஸ்ட் பெங்கால் அணி சார்பில் சுஹைர் ஆட்டத்தின் 2-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். கிளெய்ட்டன் சில்வா ஆட்டத்தின் 26-வது நிமிடத்திலும் 58-வது நிமிடத்திலும் என இரண்டு கோல்கள் அடித்தார்.

ஜாம்ஷெட்பூர் அணி சார்பில் இம்மானுவேல் தாமஸ் ஆட்டத்தின் 40-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். இதையடுத்து ஆட்ட நேர முடிவில் ஈஸ்ட் பெங்கால் அணி ஜாம்ஷெட்பூர் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

Tags:    

மேலும் செய்திகள்