உலகக் கோப்பை கால்பந்து தொடர்: நட்சத்திர வீரர் விலகல்- செனேகல் அணிக்கு பின்னடைவு

உலகக் கோப்பையில் சானே விளையாடமாட்டார் என செனேகல் அணியின் மருத்துவர் தெரிவித்துள்ளார்.;

Update:2022-11-18 19:41 IST

Image Courtesy: AFP

கத்தார்,

உலகக் கோப்பை கால்பந்து தொடர் கத்தாரில் வருகிற ஞாயிற்றுக்கிழமை (20-ந்தேதி) தொடங்குகிறது. இந்த தொடரில் செனேகல் அணியில் விளையாடுகிறது. அந்த அணியின் சிறந்த வீரர் சாடியோ மானே. 30 வயதான இவர் ஜெர்மனியின் முன்னணி கிளப் அணியான பேயர்ன் முனிச் அணிக்காக விளையாடி வருகிறார்.

அந்த அணிக்காக விளையாடியபோது காலில் காயம் ஏற்பட்டது. காயம் குணமடைந்து விடும் என நினைக்கையில், அறுவை சிகிச்சை மேற்கொள்ள இருப்பதால், அவர் உலகக் கோப்பையில் விளையாடமாட்டார் என செனேகல் அணியின் மருத்துவர் தெரிவித்துள்ளார்.

ஆப்பிரிக்காண கண்டத்தின் சிறந்த கால்பந்து வீரர் விருதை இரண்டு முறை வென்றுள்ள சானே இடம் பெறாதது அந்த அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக கருதப்படுகிறது. செனேகல் குரூப் ஏ-வில் இடம் பிடித்துள்ளது. இந்த அணியுடன் கத்தார், ஈக்வடார், நெதர்லாந்து அணிகளும் இடம் பிடித்துள்ளன. செனேகல் வருகிற 21-ந்தேதி தனது முதல் ஆட்டத்தில் நெதர்லாந்து அணியை எதிர்கொள்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்