ஜூனியர் பெண்கள் உலக கோப்பை கால்பந்து: கனடா- பிரான்ஸ் போட்டி டிரா

மற்றொரு போட்டியில் சீனா 2-1 என்ற கோல் கணக்கில் மெக்சிகோவை வீழ்த்தியது.

Update: 2022-10-12 15:07 GMT

Image Tweeted By @CanadaSoccerEN

நவி மும்பை,

ஜூனியர் (17 வயதுக்கு உட்பட்டோர்) பெண்கள் உலக கோப்பை கால்பந்து போட்டி 2008-ம் ஆண்டு முதல் 2 ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி 7-வது ஜூனியர் பெண்கள் உலக கோப்பை கால்பந்து போட்டி இந்தியாவில் உள்ள புவனேஷ்வர், கோவா, நவிமும்பை ஆகிய நகரங்களில் நேற்று தொடங்கியது.

இந்த கால்பந்து விழாவில் மொத்தம் 16 அணிகள் பங்கேற்றுள்ளன. இந்தியாவில் முதல்முறையாக நடைபெறும் இந்த போட்டியில், போட்டியை நடத்தும் நாடு என்ற வகையில் இந்திய அணிக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. தொடக்க நாளான நேற்று நடந்த போட்டியில் அமெரிக்கா 8-0 என்ற கோல் கணக்கில் இந்திய அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

இந்த நிலையில் இன்று நடந்த குரூப் 'டி' போட்டியில் கனடா- பிரான்ஸ் அணிகள் மோதின. போட்டியின் 67வது நிமிடத்தில் கனடாவின் அனபெல்லே சுக்வு முதல் கோலை அடிக்க அடுத்த ஆறு நிமிடங்களில் பிரான்ஸ் லூசி கால்பா பதில் கோல் அடித்து போட்டியை சமன் செய்தார். பின்னர் இரு அணி வீராங்கனைகளும் கோல் அடிக்காத நிலையில் போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. நவி மும்பையில் நடந்த மற்றொரு போட்டியில் (சி பிரிவு) பலம் வாய்ந்த சீனா 2-1 என்ற கோல் கணக்கில் மெக்சிகோவை வீழ்த்தியது.

Tags:    

மேலும் செய்திகள்