ரசிகர்களின் மெஸ்சி..மெஸ்சி கோஷம்...ரொனால்டோ ஒரு போட்டியில் விளையாட தடை..காரணம் என்ன?

ரொனால்டோவின் இந்த தடை நேற்று நடைபெற்ற அல் நாசர் - அல் ஹஸ்ம் இடையிலான போட்டியுடன் முடிவுக்கு வந்தது.

Update: 2024-03-01 03:01 GMT

image courtesy; AFP

ரியாத்,

போர்ச்சுகல் கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, சவுதி அரேபியாவைச் சேர்ந்த அல்- நாசர் கிளப்புக்காக விளையாடி வருகிறார். சில தினங்களுக்கு முன்பு சவுதி புரோ லீக் கால்பந்தில் அல்-நாசர் அணி 3-2 என்ற கோல் கணக்கில் அல் ஷபப்பை தோற்கடித்தது. இந்த ஆட்டத்தின்போது ரொனால்டோவை நோக்கி எதிரணி ரசிகர்கள் மெஸ்சி.... மெஸ்சி என்று கோஷம் எழுப்பினர். இதை கேட்டு எரிச்சல் அடைந்த ரொனால்டோ ரசிகர்களை நோக்கி கையால் ஆபாச சைகை காட்டினார்.

இது குறித்து விசாரித்த சவுதி அரேபியா கால்பந்து சம்மேளனத்தின் ஒழுங்கு நடவடிக்கை கமிட்டி, ரொனால்டோவுக்கு அடுத்த லீக் போட்டியில் விளையாட தடையும், ரூ.4½ லட்சம் அபராதமும் விதித்தது.

இதனால் ரொனால்டோ நேற்று நடைபெற்ற அல் நாசர் - அல் ஹஸ்ம் இடையிலான போட்டியில் பங்கேற்கவில்லை. இந்த போட்டி 4-4 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது. இதன் மூலம் இவரது தடை நேற்றுடன் முடிவுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

மேலும் செய்திகள்