உலகக்கோப்பை பயிற்சி ஆட்டம்: நெதர்லாந்து- ஆஸ்திரேலிய அணிகள் மோதிய போட்டி பாதியில் கைவிடப்பட்டது

நெதர்லாந்து- ஆஸ்திரேலிய அணிகள் மோதிய உலகக்கோப்பை பயிற்சி ஆட்டம் மழையால் பாதியில் கைவிடப்பட்டது.

Update: 2023-09-30 20:24 GMT

திருவனந்தபுரம்,

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை முன்னிட்டு திருவனந்தபுரத்தில் நேற்று நடந்த பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா-நெதர்லாந்து அணிகள் மோதின. மழை காரணமாக தாமதமாக தொடங்கியதால் இந்த ஆட்டம் 23 ஓவர்களாக குறைக்கப்பட்டது.

முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 23 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 166 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஸ்டீவன் சுமித் 55 ரன்னும், கேமரூன் கிரீன் 34 ரன்னும் எடுத்தனர். பின்னர் ஆடிய நெதர்லாந்து அணி 14.2 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 84 ரன்கள் எடுத்து இருந்த போது மீண்டும் மழை பெய்ததால் ஆட்டம் அத்துடன் கைவிடப்பட்டது.

ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் முதல் ஓவரின் கடைசி 2 பந்தில் முறையே மேக்ஸ் ஓ டாவ்ட் (0), வெஸ்லி பரேசி (0) விக்கெட்டையும், தனது அடுத்த ஓவரில் முதல் பந்தில் பாஸ் டி லீட் (0) விக்கெட்டையும் வீழ்த்தி ஹாட்ரிக் சாதனை படைத்தார். 

Tags:    

மேலும் செய்திகள்