பும்ரா அதற்கு தகுதியானவர்தான்... தோனியே என்னிடம் கூறியுள்ளார் - ஹெய்டன்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் பும்ரா கேப்டனாக செயல்பட உள்ளார்.

Update: 2024-11-21 06:52 GMT

பெர்த்,

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதன்படி இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பெர்த்தில் இந்திய நேரப்படி நாளை (வெள்ளிக்கிழமை) காலை 7.50 மணிக்கு தொடங்குகிறது.

ரோகித் சர்மா இல்லாததால் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா இந்திய அணிக்கு கேப்டனாக செயல்பட உள்ளார். கேப்டன்சியில் பெரிய அளவில் அனுபவம் இல்லாத அவரால் ஆஸ்திரேலிய மண்ணில் அனிக்கு வெற்றியை பெற்றுக்கொடுக்க முடியுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இருப்பினும் அவரால் கம்மின்ஸ் போன்று சாதிக்க முடியும் என்று சிலர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் ஜஸ்பிரித் பும்ரா கேப்டனாக செயல்படுவதற்கு தகுதியானவர் என்று மகேந்திரசிங் தோனி பல வருடங்களுக்கு முன்பே தம்மிடம் தெரிவித்ததாக ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ஹெய்டன் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "களத்தில் பும்ராவை பற்றி எனக்கு அதிகமாக தெரியாது. அவருக்கு எதிராக நான் விளையாடியதும் இல்லை. ஆனால் அவரிடம் சிறப்பான கேப்டன்ஷிப் பண்புகள் இருப்பதாக என்னுடைய சிறந்த நண்பர் மற்றும் ஆலோசகர் எம்.எஸ். தோனி சொல்லி கேட்டுள்ளேன். பும்ரா கேப்டனாக செயல்படுவதற்கு தகுதியானவர் என்று தோனி பல வருடங்களுக்கு முன்பே தெரிவித்துள்ளார்.

களத்திற்கு வெளியே பும்ராவுடன் நான் நிறைய நேரத்தை செலவிட்டுள்ளேன் விளையாட்டை பற்றிய அவரது அறிவு, கருத்துகளை வைத்து பும்ரா இங்கு வந்துள்ள இந்திய அணியை வழி நடத்துவதற்கு தகுதியானவர் என்பதை அறிந்து கொண்டேன். இந்த வேலையில் அவர் அசத்துவார் என்று உறுதியாக சொல்வேன்.

பும்ரா 80 - 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியிருப்பார் என்று நீங்கள் கருதுவீர்கள். அதற்குள் அவர் இந்திய அணியின் ஒரு நட்சத்திரமாக திகழ்கிறார். ஆனால் உண்மையில் அவர் 40 போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார். ரோகித், விராட் கோலி போன்ற இந்திய அணி மற்றும் முன்னணி வீரர்களை போல் அவர் அதிகம் விளையாடவில்லை.

கம்மின்ஸ் போல பும்ரா பந்து வீச்சில் தன்னுடைய அணியை வழி நடத்துவார். பெர்த் மைதானத்தில் கடைசியாக விளையாடிய போட்டியில் அவர் 5 விக்கெட்டுகளை எடுத்தும் இந்தியா தோற்றது. ஆனால் இம்முறை அணியை வழி நடத்தப்போகும் அவர் அனுபவத்தால் பல எதிரணி வீரர்களை வீழ்த்துவார்" என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்