உலகக்கோப்பை கிரிக்கெட்; நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் பங்கேற்க தர்மசாலா சென்றடைந்த இந்திய அணி...!
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் வரும் 22ம் தேதி இந்தியா - நியூசிலாந்து அணிகள் தர்மசாலாவில் மோத உள்ளன.
தர்மசாலா,
10 அணிகள் கலந்து கொண்டுள்ள 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இந்திய அணி தற்போது வரை 4 லீக் ஆட்டங்களில் ஆடி அனைத்திலும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது.
இந்திய அணி நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் வங்காளதேசத்தை வீழ்த்தியது. இந்த ஆட்டத்தில் விராட் கோலி சதம் அடித்து அசத்தினார். இந்நிலையில் இந்திய அணி தனது அடுத்த லீக் ஆட்டத்தில் நியூசிலாந்தை சந்திக்க உள்ளது. இந்த ஆட்டம் தர்மசாலா மைதானத்தில் நடைபெற உள்ளது.
இதையடுத்து இந்த ஆட்டத்தில் பங்கேற்பதற்காக இந்திய வீரர்கள் இன்று தர்மசாலா சென்றடைந்தனர். அங்கு அவர்களுக்கு ரசிகர்கள் ஆரவாரமாக கோஷம் எழுப்பி உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.