பெண்கள் டி20 உலகக் கோப்பை: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் நியூசிலாந்து பந்துவீச்சு தேர்வு
நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா-சோபி டிவைன் தலைமையிலான நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன
பார்ல்,
8-வது பெண்கள் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தென் ஆப்பிரிக்காவில் நேற்றிரவு தொடங்கியது. வருகிற 26-ந் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.
இன்று நடக்கும் ஆட்டத்தில் மெக் லானிங் தலைமையிலான நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா-சோபி டிவைன் தலைமையிலான நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்து வருகிறது.
இவ்விரு அணிகளும் இதுவரை நேருக்கு நேர் மோதிய 16 ஆட்டங்களில் 10-ல் ஆஸ்திரேலியாவும், 6-ல் நியூசிலாந்தும் வெற்றி கண்டுள்ளன.