மகளிர் ஒருநாள் கிரிக்கெட்; ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு.!

இவ்விரு அணிகளுக்கு இடையே முதலாவதாக நடைபெற்ற டெஸ்ட் தொடரை இந்திய அணி கைப்பற்றியது.;

Update: 2023-12-28 07:56 GMT

image courtesy; twitter/@ICC

மும்பை,

ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 1 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று ஆடி வருகிறது. இதில் முதலாவதாக நடைபெற்ற டெஸ்ட் தொடரை இந்திய அணி கைப்பற்றியது. இதையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான ஒருநாள் தொடர் நடைபெற உள்ளது.

அதன்படி முதலாவது ஒருநாள் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. இந்நிலையில் இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது. அதன்படி ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச உள்ளது. 



Tags:    

மேலும் செய்திகள்