பெண்கள் ஒருநாள் கிரிக்கெட்: இலங்கைக்கு 256 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இந்தியா
இந்திய அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 255 ரன்கள் எடுத்துள்ளது.;
பல்லேகல்லே,
இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி பல்லேகல்லே மைதனத்தில் இன்று நடைபெற்று வருகிறது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வுசெய்துள்ளது. அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீராங்கணைகளாக ஷபாலி வர்மாவும், ஸ்மிருதி மந்தனாவும் களமிறங்கினர்.
ஸ்மிருதி மந்தனா 6 ரன்களில் அவுட்டானார். ஷபாலி வர்மா 49 ரன்களில் ஆட்டமிழந்து ஒரு ரன்னில் அரைசதத்தை தவறவிட்டார். யாசிகா பாட்டியா 30 ரன்கள் எடுத்தார். இந்திய அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது.
பின்வரிசையில் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 75 ரன்களும், பூஜா 56 ரன்களும் எடுத்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இறுதியில் இந்திய அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 255 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 266 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி விளையாடி வருகிறது.