மகளிர் ஒருநாள் கிரிக்கெட்; இந்திய அணிக்கு இமாலய இலக்கு நிர்ணயித்த ஆஸ்திரேலியா..!

ஆஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக போப் லிட்ச்பீல்ட் 119 ரன்கள் குவித்தார்.

Update: 2024-01-02 12:12 GMT

image courtesy; twitter/@ICC

மும்பை,

ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் தொடரை இந்திய அணி கைப்பற்றியது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இரண்டு போட்டிகளின் முடிவில் 2-0 என ஆஸ்திரேலிய அணி தொடரை ஏற்கனவே கைப்பற்றி விட்டது.

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று மும்பையில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணியினர் இந்திய வீராங்கனைகளின் பந்துவீச்சில் சிறப்பாக விளையாடி ரன்களை சேர்த்தனர். 50 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட்டுகளை இழந்து 338 ரன்கள் குவித்துள்ளது. இதன் மூலம் இந்திய அணிக்கு 339 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நிர்ணயம் செய்துள்ளது. ஆஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக போப் லிட்ச்பீல்ட் 119 ரன்கள் குவித்தார். இந்திய அணி தரப்பில் ஸ்ரேயங்கா பாட்டீல் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதனையடுத்து இமாலய இலக்கை நோக்கி இந்திய அணி களமிறங்க உள்ளது.


Tags:    

மேலும் செய்திகள்