நியூசிலாந்துக்கு எதிரான தோல்வி: இந்திய அணிக்கு அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் - கில்கிறிஸ்ட்
இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது.
மும்பை,
நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் 3 போட்டிகளிலும் தோல்வியை தழுவிய இந்திய அணி 24 ஆண்டுகளுக்குப்பின் சொந்த மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் ஒயிட்வாஷ் ஆகியுள்ளது. இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பினஷிப் புள்ளி பட்டியலில் முதலிடத்தை இழந்துள்ளது. இதையடுத்து இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் (பார்டர்-கவாஸ்கர் தொடர்) தொடரில் ஆட உள்ளது. இந்த தொடர் வரும் 22ம் தேதி தொடங்குகிறது.
இந்த நிலையில், நியூசிலாந்துக்கு எதிரான இந்திய அணியின் தோல்வி குறித்து பேசிய ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ஆடம் கில்கிறிஸ்ட் கூறியதாவது ,
சொந்த மண்ணில் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரை இழந்தது இந்திய அணிக்கும், வீரர்களுக்கும் அடுத்து வரும் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் நிச்சயம் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும். அவர்கள், தங்களைத்தானே பார்த்து சில கடினமான கேள்விகளை கேட்க வேண்டி இருக்கும். இதன் காரணமாக அவர்களை (இந்தியா) எளிதாக வீழ்த்த முடியும் என்று நினைக்கவில்லை. அதே நேரத்தில் இந்த சவாலில் இருந்து அவர்கள் எப்படி மீண்டு வரப்போகிறார்கள் என்பதை பார்க்க சுவாரசியமாக இருக்கப்போகிறது' என்றார்.