பாக்சிங் டே டெஸ்ட்; மீண்டும் தொடக்க வீரராக களமிறங்கும் ரோகித் சர்மா ?

கடந்த 2 டெஸ்ட் போட்டிகளிலும் ரோகித் சர்மா மிடில் ஆர்டரில் களமிறங்கினார்.

Update: 2024-12-25 09:53 GMT

மெல்போர்ன்,

  ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதுவரை நடந்துள்ள 3 டெஸ்ட் முடிவில் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது. ஒரு ஆட்டம் டிராவில் முடிந்தது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது. இந்திய நேரப்படி அதிகாலை 5 மணிக்கு போட்டி தொடங்குகிறது.

இந்த நிலையில், இந்த போட்டியில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா மீண்டும் தொடக்க வீரராக களமிறங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . கடந்த 2 டெஸ்ட் போட்டிகளிலும்  ரோகித் சர்மா மிடில் ஆர்டரில் களமிறங்கினார். ஆனால் அவர் எதிர்பார்த்த அளவு செயல்படவில்லை.

 இதனால் கடந்த போட்டிகளில் ஜெய்ஸ்வாலுடன் இணைந்து தொடக்க வீரராக களமிறங்கிய கே.எல். ராகுல் மிடில் ஆர்டரில் களமிறங்குவார்  என கூறப்படுகிறது . 

Tags:    

மேலும் செய்திகள்