பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட்; ஆடும் லெவனை அறிவித்த தென் ஆப்பிரிக்கா

பாகிஸ்தான் - தென் ஆப்பிரிக்கா இடையிலான டெஸ்ட் போட்டி நாளை தொடங்குகிறது.

Update: 2024-12-25 01:28 GMT

கோப்புப்படம்

சென்சூரியன்,

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரை 2-0 என தென் ஆப்பிரிக்கா கைப்பற்றியது. தொடர்ந்து நடைபெற்ற ஒருநாள் தொடரை 3-0 என பாகிஸ்தான் கைப்பற்றி தென் ஆப்பிரிக்காவுக்கு அதிர்ச்சி அளித்தது.

இதையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நாளை தொடங்குகிறது. முதல் டெஸ்ட் போட்டி சென்சூரியனில் நாளை தொடங்குகிறது. இந்நிலையில், இந்த போட்டியில் விளையாடும் வீரர்களை தென் ஆப்பிரிக்கா அணி அறிவித்துள்ளது.

அதன்படி கேப்டனாக டெம்பா பவுமாவும், விக்கெட் கீப்பராக கைல் வெர்ரையனும் செயல்பட உள்ளனர். மேலும் இந்த அணியில் கார்பி போஷ் அறிமுக வீரராக இடம் பிடித்துள்ளார்.

தென் ஆப்பிரிக்கா அணி விவரம்: டோனி டி ஜோர்ஜி, எய்டன் மார்க்ரம், ரியான் ரிக்கெல்டன், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், டெம்பா பவுமா (கேப்டன்), டேவிட் பெட்டிங்ஹாம், கைல் வெர்ரையன் (விக்கெட் கீப்பர்), மார்கோ ஜான்சன், கார்பின் கோஷ், காகிசோ ரபாடா, டேன் பேட்டர்சன்.

Tags:    

மேலும் செய்திகள்