இந்திய ஏ அணியினர் வேண்டுமென்றே பந்தை சேதப்படுத்தி இருக்கலாம் - இயன் ஹீலி விமர்சனம்

இந்தியா ஏ - ஆஸ்திரேலியா ஏ இடையே 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது.

Update: 2024-11-05 03:11 GMT

சிட்னி,

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான இந்திய ஏ அணி, அந்நாட்டின் ஏ அணிக்கு எதிராக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி ஆஸ்திரேலியாவில் உள்ள மெக்கே நகரில் நடைபெற்றது. இந்த போட்டியில் ஆஸ்திரேலிய ஏ அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

முன்னதாக இந்த போட்டியின் நான்காம் நாள் ஆட்டத்தின் தொடக்கத்தில் ஆஸ்திரேலிய நடுவர் புதிய பந்தை அளித்திருந்தார். அது ஏன்? என இந்திய வீரர்கள் கேள்வி கேட்டபோது, "பந்தை நீங்கள் பந்தை சேதப்படுத்தியதால் அதை மாற்றி இருக்கிறோம். இதைப் பற்றி பேச வேண்டிய அவசியமே இல்லை. நீங்கள் ஆட்டத்தை தொடருங்கள்." என்றார் நடுவர் ஷான் கிரேக்.

"இந்த முடிவு முட்டாள்தனமானது" என இஷான் கிஷன் சொன்னதற்கு அவர் மீது புகார் அளிக்க இருப்பதாகவும், ஷான் ஷான் கிரேக் எச்சரித்து இருந்தார்.

எனினும், இந்த விவகாரம் குறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் வெளியிட்ட அறிவிப்பில், நடுவர், இந்திய வீரர்கள் பந்தை சேதப்படுத்தியதாக கூறியதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று விளக்கம் அளித்திருந்தது.

இந்நிலையில் அப்போட்டியில் கடைசி நாளில் ஆஸ்திரேலியாவின் பக்கம் வெற்றி இருந்ததாக முன்னாள் வீரர் இயன் ஹீலி மறைமுகமாக தெரிவித்துள்ளார். அப்போது பந்தை சேதப்படுத்தி ஆஸ்திரேலிய அணியை இந்திய அணியினர் வீழ்த்த முயற்சித்ததாகவும் அவர் விமர்சித்துள்ளார். ஆனால் அதையும் தாண்டி ஆஸ்திரேலிய நேர்மையுடன் விளையாடி வென்றதாக தெரிவிக்கும் ஹீலி இது பற்றி பேசியது பின்வருமாறு:-

"ஒரு அணி பந்து மாற்றப்படுவதை பற்றி புகார் கூறுவதை நீங்கள் பார்க்கும்போது அவர்கள் ஏதோ ஒன்றில் ஈடுபட்டுள்ளனர் என்பது புரியும். ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களை அழுத்தத்திற்குள் போடுவதற்காக இந்தியா ஏ அணி பெரிய ரிவர்ஸ் ஸ்விங்கை ஏற்படுத்த முயற்சித்தார்கள். ஏனெனில் ஆஸ்திரேலியா சிறிய இலக்கை துரத்தியது. ஆனால் இந்தியா ஏ அணியினர் நினைத்தது நடக்கவில்லை. ஆஸ்திரேலியா ஏ அணியினர் சிறப்பாக விளையாடி வென்றனர்" என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்