மல்லி பாதுகாப்பான கைகளில் இருப்பதை நம்புகிறோம்: டோனி சந்திப்பு குறித்து பதிரனாவின் குடும்பம் நெகிழ்ச்சி...!

ஐபிஎல் இறுதிப்போட்டிக்குத் தகுதிபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய பந்து வீச்சாளராக மதீஷா பதிரனா பார்க்கப்படுகிறார்.

Update: 2023-05-26 09:42 GMT

அகமதாபாத்,

ஐபிஎல் இறுதிப்போட்டிக்குத் தகுதிபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய பந்து வீச்சாளராக மதீஷா பதிரனா பார்க்கப்படுகிறார். இந்த சீசனின் சிறந்த டெத் பவுலர் என சொல்லும் அளவுக்கு அவர் கடைசிகட்ட ஓவர்களில் சிறப்பாக செயல்பட்டிருக்கிறார்.

இளம் வீரரான பதிரனாவின் இந்த எழுச்சிக்கு டோனியும் ஒரு முக்கியமான காரணம் என அவருக்கும் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் மதீஷா பதிரனாவின் குடும்பத்துடன் டோனி எடுத்துக்கொண்ட புகைப்படத்தை அவரது சகோதரி விஷூகா பதிரனா இன்ஸ்டாவில் பதிவிட்டிருக்கிறார்.

அதில், மதிஷாவைப் பற்றி நீங்கள் கவலைப்பட ஒன்றுமில்லை. அவர் எப்போதும் என்னுடன் இருக்கிறார். என்று தல டோனி கூறியபோது மல்லி பாதுகாப்பான கைகளில் இருப்பதை இப்போது நாங்கள் உறுதியாக நம்புகிறோம். இந்த தருணங்கள் நான் கனவு கண்டதையும் தாண்டியது, எனக் கூறியிருக்கிறார்.

இலங்கை ரசிகர்களே உங்களுக்காக ஒரு வைரத்தை டோனி பட்டைத்தீட்டிக் கொண்டிருக்கிறார் என வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே குறிப்பிட்டிருந்தார்.



Tags:    

மேலும் செய்திகள்