'உலகக்கோப்பை அணியில் நீக்கம் பழகி விட்டது'- சாஹல்
உலகக்கோப்பை அணியில் நீக்கம் பழகி விட்டது என இந்திய சுழற்பந்துவீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் கூறியுள்ளார்.;
புதுடெல்லி,
உலகக் கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் ஓரங்கட்டப்பட்ட சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் அளித்த பேட்டியில், 'உலகக் கோப்பை போட்டிக்கான அணியில் வெறும் 15 வீரர்களை மட்டுமே தேர்வு செய்ய முடியும் என்பது தெரியும். நீங்கள் 17 அல்லது 18 வீரர்களாக எண்ணிக்கையை உயர்த்த முடியாது.
இடம் கிடைக்காமல் போனது வேதனை அளிக்கிறது. ஆனால் அதில் இருந்து நகர்ந்து அடுத்த கட்டத்தில் கவனம் செலுத்துகிறேன். இப்போது இது எல்லாம் எனக்கு பழகி விட்டது. 3 உலகக் கோப்பை போட்டிகளில் எனக்கு இவ்வாறு நடந்துள்ளது' என்றார்.