சாம் கரனை தோளில் சுமந்தவாறு உடற்பயிற்சி செய்யும் பேர்ஸ்டோ... வைரல் வீடியோ

இங்கிலாந்து கிரிக்கெட் வீரரான பேர்ஸ்டா, சக வீரரான சாம் கரனை தன் தோலில் சுமந்தவாறு உடற்பயிற்சி செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.;

Update:2022-07-28 15:13 IST

screengrap from video tweeted by @TheBarmyArmy

பிரிஸ்டல்,

இங்கிலாந்து- தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடர் முடிவடைந்த நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி நேற்று நடைபெற்றது.

இதில் இங்கிலாந்து அணி 234 ரன்கள் குவித்தது. இங்கிலாந்து தரப்பில் 20 சிக்சர்கள் அடிக்கப்பட்டது. அடுத்து விளையாடிய தென் ஆப்பிரிக்கா அணி 193 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 41 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.

இந்நிலையில் போட்டிக்கு முன்பு இங்கிலாந்து அணி வீரர்கள் ஜிம்மில் உடற்பயிற்சியில் ஈடுபட்டனர். அப்போது பேர்ஸ்டோவ் சக வீரர்களில் ஒருவரான சாம் கரனை தோளில் தூக்கி உடற்பயிற்சி செய்தார். இந்த வீடியோவை வேகப்பந்து வீச்சாளர் டாப்லி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

Tags:    

மேலும் செய்திகள்