இலங்கைக்கு எதிரான வெற்றி...எங்களுக்கு ஆதரவு கொடுத்து வரும் இந்திய ரசிகர்களுக்கு நன்றி - ஹஷ்மத்துல்லா ஷாஹிதி

பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்துக்கு முன் ஜோனதான் ட்ராட் சொன்ன ஒரு வார்த்தை என்னுடைய மனதை பெரிய அளவில் மாற்றியது என ஹஷ்மத்துல்லா ஷாஹிதி கூறியுள்ளார்.

Update: 2023-10-31 03:29 GMT

Image Courtesy: AFP

புனே,

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் இலங்கையை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த வெற்றிக்கு பின்னர் ஆப்கானிஸ்தான் கேப்டன் ஹஷ்மத்துல்லா ஷாஹிதி அளித்த பேட்டியில் கூறியதாவது,

அனைத்து துறைகளிலும் அசத்திய எங்களுடைய அணியால் மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறேன். கடந்த ஆட்டத்தில் வென்றது எவ்விதமான இலக்கையும் எங்களால் சேசிங் செய்ய முடியும் என்ற தன்னம்பிக்கையை கொடுத்தது.

குறிப்பாக எங்களுடைய பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர். அனைத்து பயிற்சியாளர்களும் கடினமாக உழைத்து எங்களுக்கு அதிக தன்னம்பிக்கை கொடுத்து வருகின்றனர். குறிப்பாக ட்ராட் எப்போதும் நேர்மறையாக இருக்கிறார். பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்துக்கு முன் அவர் சொன்ன ஒரு வார்த்தை என்னுடைய மனதை பெரிய அளவில் மாற்றியது.

ஒரு கேப்டனாக அணியை முன்னின்று வழி நடத்துவதை இத்தொடர் முழுவதும் நான் விரும்புகிறேன். மேலும் சிறந்த வீரரான ரஷித் கான் எப்போதும் எங்களுடைய அணியை உயிர்ப்புடன் வைத்திருக்கிறார். இந்த சமயத்தில் ஆப்கானிஸ்தான் ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன். மேலும் எங்களுக்கு நேரடியாக ஆதரவு கொடுத்து வரும் இந்திய ரசிகர்களுக்கும் நான் நன்றியை தெரிவிக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்