டிராவிஸ் ஹெட் அதிரடி சதம்...நியூசிலாந்துக்கு 389 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஆஸ்திரேலியா...!

ஆஸ்திரேலியா தரப்பில் டிராவிஸ் ஹெட் 109 ரன், வார்னர் 81 ரன் அடித்தனர்.

Update: 2023-10-28 08:44 GMT

Image Courtesy: AFP 

தர்மசாலா,

உலகக்கோப்பை தொடரில் இன்று  தர்மசாலாவில் நடைபெற்று வரும் லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா - நியூசிலாந்து அணிகள் ஆடி வருகின்றன. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து ஆஸ்திரேலியாவின் தொடக்க ஆட்டக்காரர்களாக வார்னர் மற்றும் ஹெட் களம் இறங்கினர்.

இருவரும் தொடக்கம் முதலே நியூசிலாந்தின் பந்துவீச்சை அடித்து நொறுக்கினர். இருவருடைய அதிரடி ஆட்டத்தால் அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. அணியின் ஸ்கோர் 175 ஆக உயர்ந்த போது சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட வார்னர் 81 ரன்னில் அவுட் ஆனார்.

மறுமுனையில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹெட் சதம் அடித்த நிலையில் 109 ரன்னில் அவுட் ஆனார். இதையடுத்து களம் இறங்கிய மார்ஷ் 36 ரன், ஸ்மித் 18 ரன், லபுஸ்சாக்னே 18 ரன் எடுத்து அடுத்தடுத்து அவுட் ஆகினர்.

இதையடுத்து க்ளென் மேக்ஸ்வெல் மற்றும் ஜோஷ் இங்க்லிஸ் ஜோடி சேர்ந்தனர். இதில் மேக்ஸ்வெல் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதிரடியாக ஆடிய மேக்ஸ்வெல் 41 ரன் எடுத்த நிலையில் அவுட் ஆனார். இறுதியில் ஆஸ்திரேலியா 49.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 388 ரன்கள் எடுத்தது.

ஆஸ்திரேலியா அணி தரப்பில் ஹெட் 109 ரன், வார்னர் 81 ரன் அடித்தனர். இதையடுத்து 389 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து ஆட உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்