டிஎன்பிஎல்: திருப்பூர் - சேலம், நெல்லை - திண்டுக்கல் அணிகள் நாளை மோதல்

டைசி கட்ட லீக் போட்டிகள் நெல்லையில் நாளை முதல் நடக்கிறது

Update: 2023-06-30 12:24 GMT

நெல்லை,

தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி (டி.என்.பி.எல்.) கடந்த 12-ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது. கோவையில் 6 லீக் ஆட்டங்களும், திண்டுக்கலில் 7 ஆட்டங்களும், சேலத்தில் 8 ஆட்டங்களும் நடந்தன. சேலத்தில் நடந்த லீக் ஆட்டங்கள் நேற்றுடன் முடிவடைந்தது. கடைசி கட்ட லீக் போட்டிகள் நெல்லையில் நாளை முதல் இந்தியா சிமெண்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடக்கிறது. அங்கு 7 லீக் ஆட்டங்கள் நடைபெறுகிறது. நாளை இரண்டு ஆட்டங்கள் நடக்கிறது.

மாலை 3.15 மணிக்கு நடக்கும் 22-வது லீக் ஆட்டத்தில் திருப்பூர் தமிழன்ஸ்-சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. திருப்பூர் அணி 5 ஆட்டத்தில் 2 வெற்றி, 3 தோல்வியுடன் 4 புள்ளிகள் பெற்றுள்ளது.

சேலம் அணி 5 ஆட்டங்களில் ஒரு வெற்றி, 4 தோல்விகளுடன், 2 புள்ளிகள் பெற்று 7-வது இடத்தில் உள்ளது.

இரவு 7.15 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ்-திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதுகின்றன. நெல்லை அணி 5 ஆட்டத்தில் 4 வெற்றி, ஒரு தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்றுள்ளது.

அஸ்வின் தலைமையிலாக திண்டுக்கல் அணியும் 5 ஆட்டத்தில் 4 வெற்றி, ஒரு தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்றுள்ளது. ரன்-ரேட் அடிப்படையில் 3-வது இடத்தில் உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்