டி.என்.பி.எல் : சிவம் சிங் அதிரடி சதம்... திண்டுக்கல் அணி 201 ரன்கள் குவிப்பு

மதுரைக்கு எதிரான ஆட்டத்தில் திண்டுக்கல் 201 ரன்கள் குவித்துள்ளது;

Update:2024-07-26 20:56 IST

சென்னை,

8 அணிகள் பங்கேற்றுள்ள 8-வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி என் பி எல்) 20 ஓவர் கிரிக்கெட் தொடர் கடந்த 5-ம் தேதி தொடங்கியது. இதில் முதல் மூன்று கட்ட லீக் ஆட்டங்கள் சேலம், கோவை, நெல்லையில் நடந்தது. இந்த நிலையில் கடைசி கட்ட லீக் ஆட்டங்கள் திண்டுக்கல்லை அடுத்த நத்தத்தில் உள்ள என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் இன்று தொடங்கியது.

இந்த ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் - மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோதுகின்றன.இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற மதுரை கேப்டன் ஹரி நிஷாந்த் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி திண்டுக்கல் அணி முதலில் பேட்டிங் செய்தது.

தொடக்கம் முதலே திண்டுக்கல் அணி அதிரடியாக விளையாடியது. அந்த அணியில் விமல் குமார் 23 ரன்களும் , பாபா இந்திரஜித் 29 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.மறுபுறம் ஷிவம் சிங் மதுரை அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்தார். அதிரடி காட்டிய அவர் (6 பவுண்டரி , 4 சிக்சர்) சதம் அடித்து அசத்தினார். அவர் 57 பந்துகளில் 106 ரன்கள் (6 பவுண்டரி , 10 சிக்சர்)எடுத்தார்.

இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் திண்டுக்கல் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 201 ரன்கள் எடுத்தது . தொடர்ந்து 202 ரன்கள் இலக்குடன் மதுரை அணி விளையாட உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்