டிஎன்பிஎல் இறுதிப்போட்டி: நெல்லை அணிக்கு 206 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது கோவை கிங்ஸ்..!

லைகா கோவை கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 205 ரன்கள் சேர்த்தது.

Update: 2023-07-12 16:20 GMT

image courtesy: TNPL twitter

நெல்லை,

டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் நெல்லை சங்கர் நகரில் உள்ள இந்தியா சிமெண்ட்ஸ் மைதானத்தில் இன்று நடைபெற்று வரும் இறுதி ஆட்டத்தில் லைகா கோவை கிங்ஸ், நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் மோதி வருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற கோவை கிங்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

இதையடுத்து அந்த அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய சுஜய் 7 ரன்னில் அவுட்டானார். தொடர்ந்து களமிறங்கிய சச்சின் 12 ரன்னில் ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரரான சுரேஷ் குமார், முகேசுடன் ஜோடி சேர்ந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இருவரும் அணியின் ஸ்கோரை உயர்த்தினர். அரை சதத்தை கடந்த சுரேஷ் குமார் 57 ரன்களில் அவுட் ஆனார். கேப்டன் ஷாருக்கான் 7 ரன்களே எடுத்தார். இதையடுத்து முகேசுடன் இணைந்த அதீக் ரஹ்மானும் அதிரடியாக ஆடினார். இருவரும் அரை சதம் அடித்தனர்.

இந்த நிலையில் கோவை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 205 ரன்கள் சேர்த்தது. நெல்லை அணி தரப்பில் சந்தீப் வாரியர், சோனு யாதவ் தலா 2 விக்கெட்டுகளும் மோகன் பிரசாத் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து 206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நெல்லை அணி களமிறங்குகிறது.

Tags:    

மேலும் செய்திகள்