"நான் பேட்டிங் இறங்குனா இனி இதான் நடக்கும்" - எதிர் அணிகளுக்கு டோனி சொல்லும் சேதி..!

டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் 27 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றிபெற்றது.

Update: 2023-05-11 03:57 GMT

சென்னை,

நடப்பு ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற 55வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் எடுத்தது. டெல்லி தரப்பில் அந்த அணியின் சார்பில் அதிகபட்சமாக மிச்சேல் மார்ஷ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதையடுத்து களமிறங்கிய டெல்லி அணி 20 ஒவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 140 ரன்கள் மட்டுமே எடுத்தது. சென்னை அணியின் சார்பில் அதிகபட்சமாக பதிரனா 3 விக்கெட்டுகளும், தீபக் சாஹர் 2 விக்கெட்டுகளும், ஜடேஜா 1 விக்கெட்டும் வீழ்த்தினர். இதன்மூலம் டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் 27 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றிபெற்றது.

டெல்லி உடனான வெற்றி குறித்து பேசிய சென்னை அணி கேப்டன் தோனி கூறுகையில்,

டெல்லி உடனான போட்டி மிகவும் சிறப்பாக இருந்தது. ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் பந்து நன்றாக திரும்பியதாகவும், ஜடேஜா மற்றும் மொயின் அலி பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைத்தது, நல்ல விஷயம். ருதுராஜ் கெய்க்வாட் அரிதான வீரர்களில் ஒருவர். ரன்களை பெரும்பாலும் ஓடி எடுக்காமல் சில சிக்சர்களை அடிப்பதே தனது பணி. ரன்களை ஓடி எடுக்காமல் பவுண்டரிகள் மூலம் திரட்டவே, தான் திட்டமிட்டு பயிற்சி செய்து வருகிறேன். விளையாட்டில் எதைப் பெற முடியும் என்பதுதான் நான் உண்மையில் பயிற்சி செய்கிறேன், எனவே இது எனக்குச் செயல்பட உதவுகிறது" என்று கூறினார்.



Full View


Tags:    

மேலும் செய்திகள்