புஜாராவை விட சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன் இந்திய அணியில் இல்லை - முன்னாள் வீரர்

முதல் டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 32 ரன் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது.

Update: 2023-12-29 13:10 GMT

புதுடெல்லி,

இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடர் 1-1 என டிராவில் முடிந்தது. ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது.இதில் கடந்த 26ம் தேதி தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 32 ரன் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்று தொடரில் 1 -0 என முன்னிலையில் உள்ளது. 

இந்த நிலையில் , புஜாராவை விட சிறந்த டெஸ்ட் பேட்ஸ்ட்மேன் இந்திய அணியில் இல்லை என இந்திய முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது,

ரஹானேவை இந்திய அணியில் தேர்வு செய்யவில்லை. காரணமே இல்லாமல் புஜாராவை அணியில் இருந்து வெளியேற்றி உள்ளனர் . முந்தைய சாதனையைப் பார்த்தால் கோலி அளித்த  அதே பங்களிப்பை புஜாரா செய்துள்ளார். புஜாராவை அணியில் ஏன் தேர்வு செய்யவில்லை என்று புரியவில்லை, டெஸ்ட் கிரிக்கெட்டில் புஜாராவை விட சிறந்த பேட்ஸ்மேன் இந்திய அணியில் இல்லை என தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்