தியோடர் கோப்பை கிரிக்கெட் : தெற்கு மண்டல அணி அறிவிப்பு
தியோடர் கோப்பை கிரிக்கெட் போட்டி புதுச்சேரியில் வருகிற 24-ந்தேதி தொடங்குகிறது
மண்டல அணிகளுக்கான தியோடர் கோப்பை கிரிக்கெட் போட்டி புதுச்சேரியில் வருகிற 24-ந்தேதி தொடங்குகிறது. இதில் பங்கேற்கும் அணிகளில் ஒன்றான தெற்கு மண்டல அணி நேற்று அறிவிக்கப்பட்டது.
மயங்க் அகர்வால் தலைமையிலான தெற்கு மண்டல அணியில் என்.ஜெகதீசன், சாய் கிஷோர், வாஷிங்டன் சுந்தர், அருண் கார்த்திக் ஆகிய தமிழக வீரர்களுக்கு இடம் கிடைத்துள்ளது. அத்துடன் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் மகன் அர்ஜூனும் இந்த அணியில் அங்கம் வகிக்கிறார்.