ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டம்...கேட்ச் வாய்ப்புகளை தவற விட்டது தோல்விக்கு காரணமாக அமைந்தது - ஹஸ்மத்துல்லா ஷாகிதி

அணியின் நல்ல செயல்பாடுகளால் பெருமையடைந்தாலும் இத்தோல்வி ஏமாற்றத்தை கொடுக்கிறது என ஹஸ்மத்துல்லா ஷாகிதி கூறியுள்ளார்.

Update: 2023-11-08 04:08 GMT

Image Courtesy: AFP

மும்பை,

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி ஆஸ்திரேலியா அணி அரையிறுதிக்கு முன்னேறியது. இந்த ஆட்டத்தில் 292 ரன் இலக்கை சேசிங் செய்த ஆஸ்திரேலிய அணி 91 ரன்னுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இதையடுத்து 8-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த மேக்ஸ்வெல் - கம்மின்ஸ் இணை மேற்கொண்டு விக்கெட் விழாமல் பார்த்து கொண்டதோடு அணியை வெற்றிக்கு அழைத்து சென்றனர். இறுதியில் ஆஸ்திரேலியா 46.5 ஓவர்களில் 7 விக்கெட்டை இழந்து 293 ரன் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியா தரப்பில் மேக்ஸ்வெல் இரட்டை சதம் (201 ரன்) அடித்து அசத்தினார்.

இந்நிலையில் இந்த ஆட்டத்தில் அடைந்த தோல்விக்கு பின்னர் ஆப்கானிஸ்தான் கேப்டன் ஹஸ்மத்துல்லா ஷாகிதி அளித்த பேட்டியில் கூறியதாவது,

மிகவும் ஏமாற்றம். கிரிக்கெட் ஒரு வேடிக்கையான விளையாட்டு. எங்களால் இதை நம்ப முடியவில்லை. எங்கள் பந்துவீச்சாளர்களின் அசத்தலான ஆட்டத்தால் நல்ல தொடக்கத்தை பெற்றும் சில கேட்ச்களை தவற விட்டது தோல்வியை கொடுத்தது. அதன் பின் மேக்ஸ்வெலை எங்களால் நிறுத்த முடியவில்லை.

அவர் விளையாடிய ஷாட்டுகளுக்கு நான் பாராட்டுகளை கொடுக்கிறேன். எங்களுடைய பவுலர்கள் முடிந்தளவுக்கு முயற்சித்தும் அவர் எவ்விதமான வாய்ப்பையும் கொடுக்கவில்லை. எங்களுடைய அணியின் நல்ல செயல்பாடுகளால் பெருமையடைந்தாலும் இத்தோல்வி ஏமாற்றத்தை கொடுக்கிறது.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நாங்கள் வலுவாக கம்பேக் கொடுப்போம். உலகக் கோப்பையில் ஆப்கானிஸ்தானுக்காக முதல் முறையாக  சதமடித்த இப்ராஹிமுக்காக நான் பெருமைப்படுகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்