மார்ச் 31 முதல் ஐபிஎல் திருவிழா: முதல் போட்டி குஜராத் - சென்னை மோதுகிறது...! களமிறங்கிறார் 'தல' டோனி!
2023 ஐபிஎல் தொடருக்கான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை,
2023 ஐபிஎல் தொடருக்கான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மார்ச் 31ம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும் முதல் போட்டியில் குஜராத் அணியை எதிர்கொள்கிறது சென்னை . இறுதிபோட்டி மே 21-ம் தேதி நடைபெறுகிறது.
ஐபிஎல் 2023 தொடரில் 70 ஆட்டங்கள் நடைபெற உள்ளது. இதில் 18 போட்டிகள் டபுள் ஹெட்டர்களாக உள்ளது. மார்ச் 31ஆம் தேதி முதல் போட்டி நடைபெற இருக்கும் நிலையில், மே 21ஆம் தேதி இறுதிப்போட்டி நடைபெறுகிறது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் டெஸ்ட் இறுதிப்போட்டியை கருத்தில் கொண்டு, வீரர்கள் போதிய ஓய்வு பெற்று தங்களை தயார்படுத்திக்கொள்ளும் விதமாக மே மாதம் மூன்றாவது வாரத்திலேயே ஐபிஎல் போட்டிகள் நிறைவடைகின்றன. இதன் பின்னர் இரண்டு வார இடைவெளிக்கும் பின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நடைபெறுகிறது.
இந்த முறை ஐபிஎல் போட்டிகள் பழைய முறைப்படி சொந்த மைதானத்தில் 7 போட்டிகளும், பிற மைதானங்களில் 7 போட்டிகளும் விளையாடுகின்றன. மொத்தம் 12 மைதானங்களில் ஐபிஎல் போட்டிகள் நடைபெறுகின்றன.
மும்பை இந்தியன்ஸ் அணி தனது முதல் போட்டியில் ராயல் சேலஞ்சர் பெங்களூரு அணியை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி ஏப்ரல் 2ஆம் தேதி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெறுகிறது.
குரூப் 1: மும்பை, கொல்கத்தா, ராஜஸ்தான், டெல்லி, லக்னோ
குரூப் 2: சென்னை, ஐதராபாத், பெங்களூரு, பஞ்சாப், குஜராத்
அகமதாபாத், மொஹாலி, லக்னோ, ஐதராபாத், பெங்களூரு, சென்னை, டெல்லி, கொல்கத்தா, ஜெய்ப்பூர், மும்பை, கவுஹாத்தி, தர்மசாலா ஆகிய 12 மைதானங்களில் போட்டிகள் நடக்க உள்ளன.
அனைத்து அணிகளும் சொந்த மைதானத்தில் 7 போட்டிகளும், பிற மைதானங்களில் 7 போட்டிகளும் விளையாட உள்ளன. மொத்தம் 70 போட்டிகள் நடக்க உள்ளன; 18 போட்டிகளில் இரு அணிகள், இரு முறை மோதும்.
1427 நாட்களுக்கு பிறகு சென்னையில் களமிறங்கவுள்ளார் 'தல' டோனி...! வருகையால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.