முதலாவது டி20; இந்திய அணிக்கு 159 ரன்களை இலக்காக நிர்ணயித்த ஆப்கானிஸ்தான்...!

ஆப்கானிஸ்தான் அணி தரப்பில் அதிகபட்சமாக முகமது நபி 42 ரன்கள் அடித்தார்.

Update: 2024-01-11 15:13 GMT

image courtesy; twitter/@ICC

மொகாலி,

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டி மொகாலியில் இன்று நடைபெற்று வருகிறது.

இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் குர்பாஸ் மற்றும் சத்ரன் ஓரளவு நல்ல தொடக்கம் கொடுத்தனர்.

தொடக்க விக்கெட்டுக்கு 50 ரன்கள் அடித்த நிலையில் குர்பாஸ் 23 ரன்களில் ஆட்டமிழந்தார். சிறிது நேரத்திலேயே சத்ரன் 25 ரன்கள் அடித்த நிலையில் ஷிவம் துபே பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய வீரர்களில் முகமது நபி மட்டுமே சிறப்பாக விளையாடினார். மற்ற வீரர்கள் சோபிக்கவில்லை.

20 ஓவர்கள் முடிவில் ஆப்கானிஸ்தான் அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 158 ரன்கள் அடித்துள்ளது. இதன் மூலம் இந்திய அணிக்கு 159 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ஆப்கானிஸ்தான் அணி தரப்பில் அதிகபட்சமாக முகமது நபி 42 ரன்கள் அடித்தார். இந்திய அணி தரப்பில் அக்சர் படேல் மற்றும் முகேஷ் குமார் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். 

Tags:    

மேலும் செய்திகள்