இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் இடையிலான 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று நடக்கிறது

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான தொடரை கைப்பற்றும் உத்வேகத்துடன் இந்திய அணி இன்று 2-வது ஆட்டத்தில் களம் இறங்குகிறது.

Update: 2023-07-29 00:45 GMT

Image Courtesy : @BCCI twitter

பிரிட்ஜ்டவுன்,

வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. பிரிட்ஜ்டவுனில் உள்ள கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் நடந்த தொடக்க ஆட்டத்தில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி அதே மைதானத்தில் இன்று (சனிக்கிழமை) நடக்கிறது.

முதலாவது ஒரு நாள் போட்டியில் 3 விக்கெட்டுக்கு 88 ரன்களுடன் நல்ல நிலையில் இருந்த வெஸ்ட் இண்டீஸ் அணி, எஞ்சிய 7 விக்கெட்டுகளை 26 ரன்களுக்கு தாரைவார்த்து 114 ரன்னில் சுருண்டது. இலக்கு குறைவு என்பதால் இந்திய கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங் வரிசையில் மாற்றம் கொண்டு வந்தார். ரோகித் சர்மா 7-வது வரிசையில் விளையாடிய நிலையில், தொடக்க ஆட்டக்காரராக களம் கண்ட இஷான் கிஷன் அரைசதம் விளாசினார். தொடர்ந்து 22.5 ஓவர்களில் இந்தியா இலக்கை எட்டிப்பிடித்தது.

இந்நிலையில் தொடக்க ஆட்டத்தைப் போன்றே இன்றைய போட்டியிலும் ஆதிக்கம் செலுத்தி தொடரை கைப்பற்றும் முனைப்புடன் இந்திய வீரர்கள் ஆயத்தமாக உள்ளனர். போட்டிக்கான இரு அணி வீரர்களின் உத்தேச பட்டியல் வருமாறு:-

இந்தியா: ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், ஹர்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்குர், குல்தீப் யாதவ், உம்ரான் மாலிக், முகேஷ்குமார்.

வெஸ்ட் இண்டீஸ்: பிரன்டன் கிங், கைல் மேயர்ஸ், ஆலிக் அதானேஸ், ஷாய் ஹோப் (கேப்டன்), ஹெட்மயர், ரோமன் பவெல் அல்லது கேசி கர்டி, ரொமாரியா ஷெப்பர்டு, டொமினிக் டிராக்ஸ், யானிக் கரியா, குடகேஷ் மோட்டி, ஜெய்டன் சீலஸ் அல்லது அல்ஜாரி ஜோசப் அல்லது ஒஷானே தாமஸ்.

Tags:    

மேலும் செய்திகள்