அயர்லாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டி; பிளேயிங் லெவனை அறிவித்த இங்கிலாந்து அணி...!
அயர்லாந்து கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒரே ஒரு டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் விளையாட உள்ளது.
லண்டன்,
அயர்லாந்து கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒரே ஒரு டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இந்த போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நாளை நடைபெறுகிறது.
இந்நிலையில் இந்த டெஸ்ட் போட்டிக்கான பிளேயிங் லெவனை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான அந்த அணியில் ரூட், பேர்ஸ்டோ போன்ற அனுபவ வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.
மேலும், இங்கிலாந்து அணியில் ஜோஷ் டங் என்ற புதுமுக வேகப்பந்து வீச்சாளரும் இடம் பெற்றுள்ளார்.
இங்கிலாந்து பிளேயிங் லெவன்:-
பென் டக்கட், ஜாக் க்ராவ்லி, ஓலி போப், ஜோ ரூட், ஹாரி புரூக், பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஜானி பேர்ஸ்டோ, ஸ்டூவர்ட் பிராட், மேத்யூ பாட்ஸ், ஜோஷ் டங், ஜேக் லீச்.