வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டி: அயர்லாந்து 214 ரன்னுக்கு ஆல்-அவுட் - தைஜூல் இஸ்லாம் 5 விக்கெட் கைப்பற்றி அசத்தல்...!

வங்காளதேசம் - அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது.

Update: 2023-04-04 12:32 GMT

Image Courtesy: @ICC

தாக்கா,

வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்க்கொண்டு விளையாடி வரும் அயர்லாந்து கிரிக்கெட் அணி அங்கு நடைபெற்ற ஒருநாள் தொடரி 2-0 என்ற கணக்கிலும், டி20 தொடரை 2-1 என்ற கணக்கிலும் இழந்தது. இதையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான ஒரே ஒரு டெஸ்ட் போட்டி தாக்காவில் இன்று தொடங்கியது.

இதில் முதலில் பேட்டிங் ஆடிய அயார்லாந்து அணி வங்கதேசத்தின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ஜேம்ஸ் 15 ரன், முர்ரே 5 ரன், பால்பிர்னே 16 ரன் எடுத்த நிலையில் அடுத்தடுத்து அவுட் ஆகினர். இதையடுத்து களம் இறங்கிய ஹாரி டெக்டர் ஒருபுறம் நிலைத்து நின்று ஆட மறுமுனையில் விக்கெட்டுகள் விழுந்த வண்ணம் இருந்தன.

இறுதியில் அந்த அணி 77.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 214 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. அயர்லாந்து தரப்பில் ஹாரி டெக்டர் 50 ரன் எடுத்தார். வங்கதேச தரப்பில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய தைஜூல் இஸ்லாம் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய வங்கதேச அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 34 ரன் எடுத்துள்ளது. தமிம் இக்பால் 21 ரன்னிலும், ஹொசைன் ஷாண்டோ 0 ரன்னிலும் அவுட் ஆகினர். 2ம் நாள் ஆட்டம் நாளை நடைபெறுகிறது.


Tags:    

மேலும் செய்திகள்