டெஸ்ட் கிரிக்கெட்டில் சிராஜ் 50 விக்கெட்டுகளை வீழ்த்தினார்
🚨 Milestone Alert
— BCCI (@BCCI) June 8, 2023
Congratulations to @mdsirajofficial who completes 5️⃣0️⃣ wickets in Test Cricket 👏🏻👏🏻#TeamIndia | #WTC23 pic.twitter.com/1xcwgWFxS5
முதல் இன்னிங்சில் 469 ரன்களுக்கு ஆஸ்திரேலியா ஆட்டமிழப்பு
இரண்டாம் நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. சிறிது நேரத்தில் ஸ்டீவன் ஸ்மித் சதமடித்தார். இது அவரது 31வது சதமாகும். பொறுப்புடன் ஆடிய டிராவிஸ் ஹெட் 163 ரன்னில் அவுட்டானார். அடுத்து இறங்கிய கேமரூன் கிரீன் 6 ரன்னில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து, நிலைத்து நின்று ஆடிய ஸ்மித் 121 ரன்னில் போல்டானார். அடுத்து இறங்கிய மிட்செல் ஸ்டார்க் 5 ரன் எடுத்திருந்தபோது அக்சர் படேலின் துல்லிய பீல்டிங்கில் ரன் அவுட்டானார். 8-வது விக்கெட்டுக்கு அலெக்ஸ் கேரியுடன் பாட் கம்மின்ஸ் ஜோடி சேர்ந்தார். அலெக்ஸ் கேரி அதிரடியாக ஆடினார். அரை சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 48 ரன்னில் ஆட்டமிழந்தார். இறுதியில், ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 469 ரன்களை குவித்து ஆல் அவுட்டானது. இந்தியா சார்பில் சிராஜ் 4 விக்கெட்டும், ஷமி, ஷர்துல் தாக்குர் ஆகியோர் தலா 2 விக்கெட்டும், ஜடேஜா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
முதல் இன்னிங்சில் 469 ரன்களுக்கு ஆஸ்திரேலியா ஆட்டமிழந்தது
சிராஜ் பந்துவீச்சில் நாதன் லியோன் 9 ரன்களில் வெளியேறினார் . ஆஸ்திரேலிய அணி தற்போது 9 விக்கெட்டுகளை இழந்துள்ளது
450 ரன்களை கடந்த ஆஸ்திரேலிய அணி
ஆஸ்திரேலிய அணி தற்போது 8 விக்கெட் இழந்து 450 ரன்களை கடந்துள்ளது சிறப்பாக ஆடிய அலெக்ஸ் கேரி 48 ரன்களில் இந்திய வீரர் ஜடேஜா பந்துவீச்சில் வெளியேறினார்.
கடைசி 3 விக்கெட்டுகளை வீழ்த்த போராடும் இந்திய அணி பந்துவீச்சாளர்கள் போராடி வருகின்றனர்
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி: உணவு இடைவேளை வரை ஆஸ்திரேலியா 422/7
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்து வரும் ஆஸ்திரேலிய அணி 2-வது நாளான இன்று உணவு இடைவேளை வரை 7 விக்கெட் இழப்பிற்கு 422 ரன்கள் குவித்துள்ளது.
உணவு இடைவேளை வரை ஆஸ்திரேலியா 7 விக்கெட்டுகளை இழந்து 422 ரன்கள் குவித்துள்ளது
What a diving throw by Axar Patel to get Starc. pic.twitter.com/FhEGB9a6UY— Johns. (@CricCrazyJohns) June 8, 2023