லைவ் அப்டேட் டெஸ்ட் : 2வது நாள் முடிவில் இந்திய அணி 151/5
ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 469 ரன்களுக்கு ஆட்டமிழந்தது
லண்டன்,
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது.உணவு இடைவேளை வரை ஆஸ்திரேலியா 7 விக்கெட்டுகளை இழந்து 422 ரன்கள் சேர்த்து வலுவான நிலையில் உள்ளது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்து வருகிறது. இந்திய அணி ஆரம்பம் முதலே அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்து தடுமாறியது. ரோகித் சர்மா, விராட் கோலி உள்ளிட்ட அனுபவம் வாய்ந்த வீரர்கள் ஏமாற்றம் அளித்தனர். 71 ரன்களுக்குள் இந்திய அணி 4 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. அப்போது 5-வது விக்கெட்டுக்கு ரகானேவுடன் ஜடேஜா ஜோடி சேர்ந்தார். ஒருபக்கம் ரகானே நிதானமாக விளையாட ஜடேஜா அதிரடி காட்டினார் .
.சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஜடேஜா 48 ரன்னில் லயன் பந்து வீச்சில் கேட்ச் முறையில் ஆட்டமிழந்தார்.
2வது நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியு அணி 5 விக்கெட்டுகள் இழந்து 151 ரன்கள் எடுத்துள்ளது . ரஹானே 29 ரன்கள் , கே.எஸ். பரத் 5ரன்கள் எடுத்த நிலையில் களத்தில் உள்ளனர்
ஜடேஜா, நாதன் லியோன் பந்துவீச்சில் 48 ரன்களில் ஆட்டமிழந்தார்
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்து வருகிறது. இந்திய அணி ஆரம்பம் முதலே அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்து தடுமாறியது. ரோகித் சர்மா, விராட் கோலி உள்ளிட்ட அனுபவம் வாய்ந்த வீரர்கள் ஏமாற்றம் அளித்தனர். 71 ரன்களுக்குள் இந்திய அணி 4 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. அப்போது 5-வது விக்கெட்டுக்கு ரகானேவுடன் ஜடேஜா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி இந்திய அணியை சரிவில் இருந்து மீட்க போராடி வருகிறது. ஒருபக்கம் ரகானே நிதானமாக விளையாட ஜடேஜா அதிரடி காட்டி வருகிறார்.
32 ஓவர்கள் நிலவரப்படி ஜடேஜா 35 ரன்களுடனும் , ரகானே 23 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள். 32 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 125 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை விட 349 ரன்கள் பின் தங்கியுள்ளது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டம் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணியும் ஆஸ்திரேலிய அணியும் மோதுகின்றன. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 469 ரன்களுக்கு அவுட் ஆனது. இதையடுத்து இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்து வருகிறது. ஆஸ்திரேலிய அணி இமாலய ரன்கள் குவித்து உள்ளதால் இந்திய அணி இந்த டெஸ்ட் போட்டியில் வலுவான இடத்தை பெற குறைந்தபட்சம் 400 ரன்களையாவது அடித்தால் தான் முடியும் என்று ரசிகர்கள் எண்ணமாக இருந்தது. இந்திய அணி பேட்டிங்கை துவக்கியதுமே அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்து ஏமாற்றம் அளித்தது. ரோகித் சர்மா (15 ரன்கள்) சுப்மான் கில் (13 ரன்கள்), புஜாரா (14 ரன்கள்) வெளியேறி அதிர்ச்சி கொடுத்தனர். தற்போது நட்சத்திர வீரர் விராட் கோலியும் 14 ரன்களில் ஆட்டமிழந்தார். முன்னணி விக்கெட்டுகளை பறிகொடுத்து இந்திய அணி தடுமாறி வருகிற
விராட் கோலி 14 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்...!
ரோகித் சர்மா , கில் , புஜாரா என 3 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தடுமாறுகிறது, ஆஸ்திரேலிய அணியின் கம்மின்ஸ் , போலண்ட் , கிரீன் தலா 1 விக்கெட் வீழ்த்தினர் 3 விக்கெட் இழந்து இந்திய அணி தடுமாற்றம்
புஜாரா 14 ரன்களுக்கு கிரீன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்
கோலி மற்றும் புஜாரா இருவரும் நிலைத்து ஆடி வருகின்றனர்