டி20 போட்டி: வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக தென் ஆப்பிரிக்கா 163 ரன்கள் சேர்ப்பு
தென் ஆப்பிரிக்க அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 163 ரன்கள் எடுத்துள்ளது.
ஜமைக்கா,
தென் ஆப்பிரிக்க அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. முன்னதாக நடைபெற்ற இரு ஆட்டங்களிலும் வெஸ்ட் இண்டீஸ் வெற்றிபெற்று 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.
இந்த நிலையில் மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி ஜமைக்காவில் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த அந்த அணி, 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 163 ரன்கள் எடுத்துள்ளது.
அதிகபட்சமாக கேப்டன் வென் டர் டசன் 51 ரன்கள் எடுத்தார். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஒபெட் மெக்காய் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதையடுத்து 164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி விளையாடி வருகிறது.