இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடர்...வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு திரும்பும் அதிரடி வீரர்...!

இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2023-12-10 03:30 GMT

Image Courtesy : AFP

பார்படாஸ்,

இங்கிலாந்து கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள், 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீஸ் அணி கைப்பற்றியது.

இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் வரும் 12ம் தேதி தொடங்க உள்ளது. இந்நிலையில் இந்த டி20 தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் அதிரடி ஆட்டக்காரரான ஆண்ட்ரே ரசல் இடம் பிடித்துள்ளார்.

ஆண்ட்ரே ரசல் கடந்த 2021-ம் ஆண்டு ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக விளையாடினார். அதன் பின்னர் தற்போது இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் இடம் பிடித்துள்ளார். இந்த அணிக்கு ரோவ்மன் பவல் கேப்டனாகவும், ஷாய் ஹோப் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி விவரம்:

ரோவ்மன் பவல் (கேப்டன்), ஷாய் ஹோப் (துணை கேப்டன்), ரோஸ்டன் சேஸ், மேத்யூ போர்ட, ஷிம்ரோன் ஹெட்மையர், ஜேசன் ஹோல்டர், அகேல் ஹோசைன், அல்ஜாரி ஜோசப், பிரண்டன் கிங், கைல் மேயர்ஸ், குடகேஷ் மோட்டி, நிக்கோலஸ் பூரன், ஆண்ட்ரே ரசல், ஷெர்பேன் ரூதர்போர்டு, ரொமாரியோ ஷெப்பர்ட்.

Tags:    

மேலும் செய்திகள்