இந்திய அணிக்கு கேப்டன் ஆகிறார் சுப்மன் கில் ?

நியூசிலாந்து ‘ஏ’ அணிக்கு எதிரான தொடரில் இந்தியா ‘ஏ’ அணிக்கு கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளது.;

Update: 2022-08-21 09:29 GMT

புது டெல்லி,

இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் நியூசிலாந்து 'ஏ' அணி வரும் செப்டம்பர் மாதம் (1-4), (8-11), (15-18) ஆகிய தேதிகளில் பெங்களூருவில் மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் செப்டம்பர்-22, 25, 27 ஆகிய தேதிகளில் சென்னையில் 3 ஒருநாள் போட்டிகளிலும் களம் காணத் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கு எதிரான போட்டிகளில் பங்கேற்கும் நியூசிலாந்து 'ஏ' அணி வீரர்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு உள்ளனர். இந்த தொடருக்கான இந்திய அணி இன்னும் சில தினங்களில் அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளது. இந்நிலையில், இந்த தொடருக்கான இந்திய அணிக்கு தலைமை ஏற்கும் பொறுப்பை இந்திய இளம் வீரர் சுப்மன் கில் பெற வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும், இந்த தொடருக்கான இந்திய அணியில் மும்பையை சேர்ந்த இளம் வீரர் ஷாம்ஸ் முலானிக்கு வாய்ப்பு அளிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த அணியில் காயம் காரணமாக ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து விலகிய வாஷிங்டன் சுந்தரும், ரஞ்சி கோப்பை போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இளம் வீரர்கள் சர்ப்ராஸ் கான், யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோருக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என தெரிகிறது.

Tags:    

மேலும் செய்திகள்