அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் பென்ஸ்டோக்ஸ் விளையாட மாட்டார்- சி.எஸ்.கே தகவல்
பணிச்சுமை மற்றும் ஃபிட்னஸ் காரணமாக பென்ஸ்ஸ்டோக்ஸ் அடுத்த ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக சி.எஸ்.கே தெரிவித்துள்ளது.
சென்னை,
2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பென்ஸ்டோக்ஸ் விளையாட மாட்டார் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. பணிச்சுமை மற்றும் ஃபிட்னஸ் காரணமாக பென்ஸ்ஸ்டோக்ஸ் அடுத்த ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக சி.எஸ்.கே தெரிவித்துள்ளது. பென்ஸ்டோக்ஸின் இந்த முடிவுக்கு அணி நிர்வாகம் ஆதரவாக இருப்பதாகவும் சி.எஸ்.கே நிர்வாகம் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.
கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் 2023 ஏலத்தில் பென்ஸ்டோக்ஸ், ஐபிஎல் தொடரிலேயே அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பென்ஸ்டோக்சை 16.25 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது. எனினும், கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக வெறும் 2 போட்டிகளில் மட்டுமே பென்ஸ்டோக்ஸ் விளையாடினார்.