இந்தியா - அயர்லாந்து இடையிலான 3-வது டி20 போட்டி மழையால் தொடங்குவதில் தாமதம்

இந்தியா- அயர்லாந்து மோதும் 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி டப்ளினில் இன்று நடைபெற உள்ளது

Update: 2023-08-23 13:54 GMT

டப்ளின்,

20 ஓவர் கிரிக்கெட் இந்திய கிரிக்கெட் அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் மழையால் பாதியில் நிறுத்தப்பட்ட முதல் ஆட்டத்தில் 'டக்வொர்த் லீவிஸ்' விதிப்படி 2 ரன் வித்தியாசத்தில வெற்றி பெற்ற இந்தியா, 2-வது ஆட்டத்தில் 33 ரன் வித்தியாசத்தில் அயர்லாந்தை தோற்கடித்து தொடரையும் கைப்பற்றியது.

இந்தியா- அயர்லாந்து மோதும் 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி டப்ளினில் இன்று நடைபெற உள்ளது. இந்த நிலையில் போட்டி நடைபெறும் பகுதியில் மழை பெய்து வருவதால் போட்டிக்கான டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.மழை நின்ற பின்னர் போட்டி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்