சென்னை - பஞ்சாப் போட்டியை நேரில் கண்டு ரசிக்கும் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின்
சென்னை - பஞ்சாப் அணிகள் மோதும் போட்டியை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் கண்டு ரசித்து வருகிறார்.
சென்னை,
16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் 41-வது லீக் ஆட்டத்தில் 4 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணியை சந்திக்கிறது.
இந்த ஆட்டத்துக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது.அதன்படி சென்னை அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.
இந்த நிலையில் சேப்பாக்கத்தில் நடக்கும் சென்னை - பஞ்சாப் அணிகள் மோதும் போட்டியை முதல் அமைச்சர் முக ஸ்டாலின் நேரில் கண்டு ரசித்து வருகிறார்.