இலங்கை கிரிக்கெட் வீரர் சேனநாயக்க வெளிநாடு செல்ல தடை - காரணம் என்ன...?

முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் சேனநாயக்க சூதாட்ட புகாரில் சிக்கியதை அடுத்து வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

Update: 2023-08-16 02:42 GMT

கோப்புப்படம்

கொழும்பு,

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சேனநாயக்க. 38 வயதான இவர் 2012 முதல் 2016 வரையில் 49 ஒருநாள் போட்டி, ஒரு டெஸ்ட் மற்றும் 24 இருபது ஓவர் ஆட்டங்களில் விளையாடி உள்ளார். சேனநாயக்க கடந்த 2020-ம் ஆண்டு இலங்கை பிரீமியர் லீக்கில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.

இந்த நிலையில் இது தொடர்பான வழக்கை விசாரித்த கொழும்பு தலைமை மாஜிஸ்திரேட் கோர்ட்டு சேனநாயக்க 3 மாதம் வெளிநாடு செல்ல தடை விதித்து உத்தரவிட்டு உள்ளது. இதுதொடர்பான உத்தரவை குடியேற்றம் மற்றும் குடியமர்வு பிரிவு பொதுக் கட்டுப்பாட்டாளர் துறைக்கு அனுப்பியுள்ளது.

இந்த உத்தரவு கிடைத்து உள்ளதாக இலங்கை அட்டர்னி ஜெனரல் பிரிவு தெரிவித்துள்ளது. மேலும் சேனநாயக்க மீது சிறப்பு விசாரணைக்குழு அறிக்கையின் பேரில் குற்றச்சாட்டுகளை பதிவு செய்யுமாறு அட்டர்னி ஜெனரல் பிரிவுக்கு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்