டி20 உலகக் கோப்பை தொடருக்காக நியூயார்க் புறப்பட்ட இலங்கை அணி

20 அணிகள் கலந்து கொள்ளும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் நடைபெற உள்ளது.

Update: 2024-05-14 01:30 GMT

கொழும்பு,

20 அணிகள் கலந்து கொள்ளும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. இந்த தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற உள்ளது. இந்திய நேரப்படி ஜூன் 2ம் தேதி தொடர் தொடங்குகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் அமெரிக்கா மற்றும் கனடா நாடுகள் மோதுகின்றன.

உலகக் கோப்பை தொடருக்காக ஒவ்வொரு அணியும் முழுவீச்சில் தயாராகி வருகின்றன. இந்த தொடரில் கலந்து கொள்ள உள்ள பாகிஸ்தான், வங்காளதேசத்தை தவிர மற்ற அணி நிர்வாகங்கள் தங்களது அணி விவரங்களை அறிவித்து விட்டன. இந்திய அணி ரோகித் சர்மா தலைமையில் களம் இறங்குகிறது. இலங்கை அணிக்கு வனிந்து ஹசரங்கா கேப்டனாகவும், சரித் அசலங்கா துணை கேப்டனகாவும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

இந்த நிலையில், உலகக் கோப்பை தொடருக்கு தயாராகும் வகையில், இலங்கை கிரிக்கெட் அணி அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு புறப்பட்டது. இலங்கை அணி அமெரிக்கா புறப்பட்டதை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளது.




Tags:    

மேலும் செய்திகள்