ஐ.பி.எல்.2025: சென்னை - பெங்களூரு போட்டிக்கான டிக்கெட் விற்பனை தொடங்கியது

28-ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ள லீக் ஆட்டத்தில் சென்னை - பெங்களூரு அணிகள் மோத உள்ளன.;

Update:2025-03-25 10:22 IST
ஐ.பி.எல்.2025: சென்னை - பெங்களூரு போட்டிக்கான டிக்கெட் விற்பனை தொடங்கியது

சென்னை,

18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் கடந்த 22ம் தேதி தொடங்கியது. 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா 2 முறையும், எதிர்பிரிவில் உள்ள ஒரு அணியுடன் மட்டும் 2 முறையும், மற்ற அணிகளுடன் தலா ஒரு முறையும் லீக்கில் மோத வேண்டும். ஒவ்வொரு அணியும் மொத்தம் 14 லீக் ஆட்டங்களில் விளையாடும். லீக் சுற்று முடிவில் புள்ளி பட்டியலில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறும்.

இதில் வருகிற 28-ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ள லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோத உள்ளன. இரு அணிகளும் தங்களது முதல் ஆட்டத்தில் வெற்றி பெற்றுள்ளன.

இந்நிலையில் இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை ஆன்லைன் மூலம் இன்று காலை 10.15 மணிக்கு தொடங்கியது . www.chennaisuperkings.com என்ற இணையதளத்தின் வாயிலாக ரசிகர்கள் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு டிக்கெட்டின் விலை ரூ.1,700, முதல் ரூ.7,500 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்