ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியின் டி20 கேப்டனாக சிக்கந்தர் ராசா நியமனம்!

மூன்று வடிவிலான போட்டிகளுக்கும் கேப்டனாக செயல்பட்ட கிரெய்க் எர்வின், இனி டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கான கேப்டனாக செயல்பட உள்ளார்.;

Update:2023-11-05 11:45 IST

image courtesy; AFP 

ஹராரே,

ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியின் டி20 கேப்டனாக ஆல் ரவுண்டர் சிக்கந்தர் ராசா நியமிக்கப்பட்டுள்ளார். இந்த முடிவு நேற்று நடைபெற்ற ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியத்தின் கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது.

சிக்கந்தர் ராசாவின் கேப்டன் பொறுப்பு அடுத்த மாதம் நடைபெற உள்ள 2024ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பை தொடருக்கான தகுதிச்சுற்று ஆட்டங்களில் இருந்து ஆரம்பமாக உள்ளது. மேலும் டேவ் ஹொட்டன் தலைமைப் பயிற்சியாளராக தொடருகிறார்.

இதற்கு முன் மூன்று வடிவிலான போட்டிகளுக்கும் கேப்டனாக செயல்பட்ட கிரெய்க் எர்வின், இனி டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கான கேப்டனாக செயல்பட உள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்